March 12, 2017
புதிய இந்தியா இன்னும் ஐந்தாண்டுகளில் உருவாகும் - பிரதமர் மோடி
உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில தேர்தலில் பா.ஜ.க. மாபெரும் வெற்றியைப் பெற்றதையடுத்து, இன்னும் ஐந்தாண்டுகளில் புதிய இந்தியா உருவாகும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றுள்ளது. மேலும், மணிப்பூர், கோவா மாநிலங்களில் ஆட்சியை அமைப்பதற்கு தீவிர முயற்சிகள் எடுத்துவருகிறது.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ,” 125 கோடி மக்களின் சக்தியாலும், வலிமையான திறனாலும் புதிய இந்தியா பிறக்க உள்ளது. பிறக்க இருக்கும் புதிய இந்தியா வளர்ச்சியை நோக்கி செல்லும். இன்னும் 5 ஆண்டுகளில் அதாவது 2022-ம் ஆண்டில் நாட்டின் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் போது, மகாத்மா காந்தி, அம்பேத்கர், வல்லபாய் படேல் ஆகியோரை பெருமைப்படுத்தும் விதத்தில் நாடு இருக்கும்” என பதிவு செய்துள்ளார்.
புதிய இந்தியா இன்னும் ஐந்தாண்டுகளில் உருவாகும் - பிரதமர் மோடி
Reviewed by மறத்தமிழன்
on
March 12, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 12, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.