Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 10, 2017

மார்பிங் செய்து பேஸ்புக்கில் படம் பதிவேற்றம்: ஆசிட் வீசி கொன்று விடுவதாக பெண் வழக்கறிஞருக்கு மிரட்டல் - நெல்லை வக்கீலுக்கு வலை


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கீழக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் சபீதா (22), பண்ருட்டி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவர் முகநூல் (பேஸ்புக்) கணக்கு வைத்துள்ளார். இவரது நண்பர்கள் வட்டத்தில், சில மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுககனி என்பவர் இணைந்துள்ளார். இவரும் வழக்கறிஞர் பணி செய்து வருகிறார். முகநூலில் பல்வேறு பதிவுகளை இருவரும் பரிமாறிக்கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 14 (காதலர் தினம்) அன்று சபீதாவின் முகநூல் பக்கத்தில் ஆறுமுககனி ஒரு புகைப்படத்தை பதிவேற்றி உள்ளார்.

அதில் ஆறுமுககனியும், சபீதாவும் சேர்ந்து எடுத்துக்கொண்டது போன்ற படம் இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சபீதா ஆறுமுககனியின் செல்போனில் தொடர்பு கொண்டு ஏன் இவ்வாறு செய்தீர்கள்? என்று கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஆறுமுககனி சபீதாவை அசிங்கமாக திட்டினாராம். மேலும் உன் மீது ஆசிட் வீசி விடுவேன் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுபற்றி சபீதா முத்தாண்டிக்குப்பம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆறுமுககனியை கைது செய்வதற்காக நெல்லை விரைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.