March 4, 2017
அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி பங்கேற்ற தேர்தல் பேரணியில் கல்வீச்சு.. வாரணாசியில் களேபரம்
அகிலேஷ் யாதவும், ராகுல் காந்தியும் இணைந்து ரோடு ஷோ நடத்தினர். இதில் அகிலேஷ் மனைவியும் எம்.பியுமான டிம்பிள் பங்கேற்றார். விஷமிகள் சிலர் தொண்டர்கள் மீது சரமாரியாக கல் வீசி தாக்குதல் நடத்தினர்.
உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தியும் ணைந்து பங்கேற்ற தேர்தல் பேரணியின்போது கல்வீச்சு சம்பவம் அரங்கேறியதால் பதற்றம் நிலவியது.
உத்தரபிரதேசம் இறுதிகட்ட வாக்குப்பதிவை சந்திக்க உள்ள நிலையில் அங்கு பிரசாரம் சூடு பறக்கிறது. பிரதமர் மோடி இன்று வாரணாசியில் பிரசாரம் செய்த நிலையில், அதே நகரில் அகிலேஷ் யாதவும், ராகுல் காந்தியும் இணைந்து ரோடு ஷோ நடத்தினர். இதில் அகிலேஷ் மனைவியும் எம்.பியுமான டிம்பிள் பங்கேற்றார்.
மிகப்பெரிய கூட்டம் கூடியிருந்த நிலையில், விஷமிகள் சிலர் தொண்டர்கள் மீது சரமாரியாக கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. அப்போது ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் இருவரும் அந்த இடத்தில் இல்லை. தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டதால் கல்வீச்சில் ஈடுபட்ட விஷமிகள் தப்பியோடிவிட்டனர்.
இந்த சம்பவத்தால் வாரணாசியில் பெரும் பரபரப்பு நிலவியது.
அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி பங்கேற்ற தேர்தல் பேரணியில் கல்வீச்சு.. வாரணாசியில் களேபரம்
Reviewed by மறத்தமிழன்
on
March 04, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 04, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.