Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 5, 2017

முதலமைச்சர் என்பதை தாண்டி எடப்பாடிக்கும் எனக்கும் நல்ல நட்பு உண்டு: வைகோ -சரிதான் அடுத்து உள்ளே


அண்மைக்காலமாக வைகோ யாரை ஆதரித்தாலும், வாழ்த்து தெரிவித்தாலும், சம்பந்தப்பட்டவர்களுக்கும், அவர்களுடைய ஆதரவாளர்களுக்கும் அடிவயிறு கலங்க ஆரம்பித்து விடுகிறது.
அந்த அளவுக்கு வைகோவின் வார்த்தைகளில் அமங்கலம் தொற்றிக் கொண்டுள்ளது என பலரும் புலம்புகின்றனர்.
அது போதாது என்று வலைதள நெட்டிசன்களும் அதை ஊதி பெரிதாக்கி மேலும், மேலும் திகிலூட்டிக் கொண்டிருக்கின்றனர்.
அதற்கு, வலு சேர்ப்பது போல, “முதலமைச்சர் என்பதை தாண்டி எடப்பாடி பழனிசாமிக்கும் எனக்கும் நல்ல நட்பு உண்டு” என்று வைகோ ஒரு இடத்தில் கூறிவிட்டார்.
சும்மா இருந்த வாய்க்கு வெற்றிலை பாக்கு கொடுத்ததுபோல, இஷ்டத்துக்கு மென்று மென்று மீம்ஸ் போட ஆரம்பித்து விட்டனர் நமது நெட்டிசன்கள்.
“சரிதான் அடுத்து உள்ளே அனுப்ப பிளான்” என்று ஆரம்பித்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் வரிசை கட்ட ஆரம்பித்து விட்டன.
முதல் தேர்தலில் எம்.எல்.ஏ, அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் என வலம் வந்த விஜயகாந்த், வைகோ ஒருங்கிணைப்பாளராக இருந்த மக்கள் நல கூட்டணியில் சேர்ந்து டெபாசிட் கூட வாங்க முடியாமல் தோற்றார்.
“சசிகலா 4 ஜெயலலிதாவுக்கு சமம்” என்று சொல்லி ஆதரவு தெரிவித்தார் வைகோ. அடுத்த சில நாட்களில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று பெங்களூரு சென்றார் சசிகலா.
வைகோ ஆதரவு தெரிவித்தபோதே எனக்கு தெரியும்.. என்று அவரது ஆதரவாளர்கள் பலர் கருவிக்கொண்டிருந்த மீம்ஸ்கள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் வெளிவந்தன.
தற்போது, “முதலைச்சர் என்பதை தாண்டி எடப்பாடி பழனிசாமிக்கும் எனக்கும் நல்ல நட்பு உண்டு” என்று வைகோ சொல்லி இருப்பதை அடுத்து அவரும் உள்ளே போய்விடுவார் என்று அதிமுகவினர் அஞ்சுகின்றனர்.
அதனால், எதை சொன்னாலும் நெட்டிசன்கள் கலாய்க்கிறார்களே என்று வைகோவே ஒரு பேட்டியில் வருத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.