Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 8, 2017

சொல்வதெல்லாம் உண்மை , நிஜங்கள்…லட்சுமி ராமகிருஷ்ணன்,குஷ்பு மீது போலீசில் புகார்!


சென்னை  : நடிகைகள் குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார் வழக்கறிஞர் எஸ்.எஸ்.பாலாஜி.
சன் டிவியில் ‘நிஜங்கள்’ என்ற டி.வி.நிகழ்ச்சியை நடிகை குஷ்பு நடத்தி வருகிறார். இதேபோல ‘ஜி’ தமிழில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற நிகழ்ச்சியை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வருகிறார்.
இந்த நிகழ்ச்சிகளில் இருவரும் குடும்ப உறவுகளை அவமானப்படுத்தும் நிகழ்ச்சிகளாகும். இந்த நிகழ்ச்சிகளை நடத்தும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.எஸ்.பாலாஜி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
‘நிஜங்கள்’, ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழச்சிகள் மனித உரிமைகள், மற்றும் குழந்தைகள் உரிமைகளை மீறி வருகிறது. குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் படத்தை ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும் நிகழ்ச்சிகளில் மோசமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். நிகழ்ச்சி நடத்தும் குஷ்வு, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோரும் மோசமாக பேசுகிறார்கள்.
குடும்ப பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்பவர்கள் அதற்கான படிப்பு படித்திருக்க வேண்டும். அவர்களிடம் அந்த படிப்பு இல்லை. குடும்பம், கலாச்சார உறவுகளை அவமானப்படுத்துகிறது.
இந்த நிகழ்ச்சிகளை தடை செய்வதுடன் அதை நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வழக்கறிஞர் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.