March 13, 2017
ஜெ. என்ன யோகா டீச்சரா? எல்லோரும் தியானம் இருக்க வருகிறார்களே? சுப.வீ. பொளேர்
ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ், தீபாவைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி எப்போது தியானத்தில் அமருவார் என பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவில் தலையெடுக்க விரும்புகிறவர்களுக்கு 'கல்லறை தியான' வியாதி வந்துவிட்டதுபோல.. அதுவும் இரவு நேரத்தில் திடீர் திடீரென ஜெயலலிதாவின் கல்லறையில் அமர்ந்து தியானம் மேற்கொள்வது தொடர் கதையாகி வருகிறது.
ஜெயலலிதாவின் கல்லறைதான் தற்போது அரசியல் திருப்பங்களுக்கு மையமாக இருந்து வருகிறது. திடீரென இரவு நேரத்தில் ஓ. பன்னீர்செல்வம் ஜெயலலலிதாவின் கல்லறைக்குப் போய் 40 நிமிடம் தியானம் செய்தார்.
பின்னர் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். அரசாங்க சொத்தை கொள்ளையடித்து தண்டனை பெற்ற குற்றவாளி சசிகலா, சிறைக்குப் போவதற்கு முன்னர் ஜெயலலிதாவின் கல்லறைக்குப் போய் 3 முறை ஓங்கி அடித்து சத்தியம் செய்துவிட்டுப் போனார்.
இப்போது நானே உண்மையான வாரிசு என பேசிவரும் தீபாவும் திடுதிப்பென ஜெயலலிதாவின் கல்லறைக்கு போய் 45 நிமிடம் தியானம் மேற்கொண்டார். இது குறித்து திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலர் பேராசிரியர் சுப.வீர்பாண்டியன் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
ஒரு நண்பர் கேட்கிறார், "ஜெயலலிதா என்ன யோகா டீச்சரா?"
இவ்வாறு சுப.வீரபாண்டியன் பதிவிட்டுள்ளார்.
ஜெ. என்ன யோகா டீச்சரா? எல்லோரும் தியானம் இருக்க வருகிறார்களே? சுப.வீ. பொளேர்
Reviewed by மறத்தமிழன்
on
March 13, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 13, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)





No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.