Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 8, 2017

தமிழக மீனவர் படுகொலையை கிண்டலடித்து சுப்பிரமணியசாமி ட்வீட்.!


நேற்று இரவு கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டியடித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் படகில் இருந்த மீனவர் பிரிட்ஜோ மீது குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் சக மீனவர் ஒருவர் காலில் குண்டு பாய்ந்து பலத்த காயத்துடன் கரை திரும்பியுள்ளனர்.
இது பற்றி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மீனவர்களை பற்றி கிண்டலடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சம்பவம் தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து தமிழ் உணர்வாளர்கள், கட்டுமரங்களை எடுத்துக்கொண்டு இலங்கை கடற்படையுடன் சண்டை போடட்டும் என்று கிண்டலடித்துள்ளார்.
இவரது பதிவு எரிகின்ற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போன்று உள்ளது. மத்தியில் ஆளும் கட்சியில் ஒரு எம்.பியாக இருந்து கொண்டு இவ்வாறு பதிவிடுவது மிகவும் கேவலமாக உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.