March 10, 2017
தாலிகட்டும் நேரத்தில் விஷம் குடித்து மயங்கிய அக்கா.. திடீர் மணமகளான தங்கை !
திருச்சி துறையூரை அடுத்த ஒட்டம்பட்டியை சேர்ந்தவர் பாலகுமார் (27). இவருக்கும் சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவி சரண்யா(20) என்பவருக்கும் நேற்று முன்தினம் காலை துறையூரில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை மணப்பெண்ணை கோயிலுக்கு அழைத்து செல்ல இருந்தபோது அவர் விஷமருந்தி மயங்கிக் கிடந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனே அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவர் தொடர்ந்து படிக்க விரும்பியதால், திருமணத்தில் விருப்பமில்லாமல் விஷமருந்தியது தெரிய வந்தது. இதுகுறித்து மாப்பிள்ளை வீட்டார் துறையூர் போலீசில் புகார் அளித்தனர். இதற்கிடையே, இருவீட்டாரும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மணப்பெண் சரண்யாவின் தங்கை சங்கீதாவை(18) திருமணம் செய்து தர பெண் வீட்டார் சம்மதித்தனர்.
சங்கீதா கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து பாலகுமாருக்கும் சங்கீதாவுக்கும் திருமணம் நடந்தது. போலீசில் கொடுத்த புகாரும் திரும்ப பெறப்பட்டது. தாலி கட்டும் நேரத்தில் மணமகள்
தாலிகட்டும் நேரத்தில் விஷம் குடித்து மயங்கிய அக்கா.. திடீர் மணமகளான தங்கை !
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 10, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 10, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.