Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 1, 2017

ஒரு நாளைக்கு எத்தனை உத்தரவுடா போடுவே: தினகரன் அட்டகாசம்: ராஜினாமா எடப்பாடி


ஒரு நாளைக்கு எத்தனை உத்தரவுடா போடுவே பதவியை தூக்கி எறியவுள்ள பழனிச்சாமி!
 சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரனின் அடுத்தடுத்த கட்டளைகளால் முதல்வர் எடப்பாடு மிகவும் கடுப்பாகியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா மறைந்த போது சசிகலாவின் விசுவாசியான எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க முயற்சித்தார். ஆனால் மத்திய அரசின் நெருக்கடியால் ஓபிஎஸ் முதல்வரானார்.
அதன் பின் தானே முதல்வராக முயற்சித்த சசிகலா, சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றார். அப்போது பழனிச்சாமியை முதல்வராக நியமித்ததோடு, அதிமுக தலைமையை அக்கா மகன் டிடிவி தினகரனிடம் அளித்தார்.
சசிகலா சிறைக்கு சென்ற பின், அதிமுகவின் துணை பொதுச்செயலாளரான தினகரன், ஒட்டு மொத்த கட்சி மற்றும் ஆட்சியை தன் கட்டுப்பாட்டி வைக்க முயற்சி செய்து வருகிறாராம்.
ஒருநாளைக்கு இருபது உத்தரவுகள் போடுகிறார் தினகரன்.நினைத்த அதிகாரிகளை உடனே மாற்று  என்கிறார். மரியாதைக் குறைவாகவும் அழைக்கிறார்.
கட்சி தலைமையில் உள்ள தினகரன், முதல்வர் பழனிச்சாமியை இதை செய்யுங்கள், இப்படி செய்யுங்கள் என கட்டுப்படுத்தி வருகின்றாராம்.
இது தவிர நடராஜன், ராவணன், வெங்கடேஷ், என அனைவரும் உத்தரவு போடுகிறார்கள்.
இதனால் மிகவும் கடுப்பாகியுள்ள எடப்பாடி பழனிச்சாமி, நான் சசிகலாவுக்கு மட்டும் தான் விசுவசி.
அதனால் அவரது குடும்பமே என்னை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள விரும்புவதும், அடிமையாக்க துடிப்பதும் சரியா? என கடுகடு வென உள்ளார்.இதை கேட்டகவும் செய்து விட்டார்.
சசிகலாவின் உத்தரவால் ஓபிஎஸ் தன் பதவியை ராஜினாமா செய்ததைப் போல, தற்போது தினகரனின் அதீத ஆதிக்கத்தால் எடப்பாடி பழனிச்சாமி தன் முதல்வர் பதவியை விரைவில் துறப்பார் என கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படி ஒரு பினாமி ஆட்சி தேவையா என்கிறார்கள்  மக்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.