March 20, 2017
பயணிகள் வசதிக்காக ஆப் (app) அறிமுகம் செய்கிறது ரயில்வே: டி.வி., ரேடியோ நிகழ்ச்சிகளை பார்த்து, கேட்டு மகிழலாம்
ரயில் பயணிகளின் வசதிக்காக பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய புதிய ஆப்-ஐ ரயில்வே துறை அறிமுகம் செய்யவுள்ளது. எஃப்.எம், தொலைக்காட்சி உள்ளிட்ட சேவைகள் புதிய ஆப் மூலம் பெறமுடியும். இந்த ஆப் வடிவமைப்பதற்கான டென்டரை ரயில்வே அமைச்சகம் கோரியுள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள இந்த ஆப் மூலம் செய்யப்படும் விளம்பரங்கள் வழியாக, ரயில்வே துறைக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கவுள்ளது.
3 ஆண்டுகளில் ரூ.2,277 கோடியும், 10 ஆண்டுகளில் ரயில்வே துறைக்கு ரூ.20,000 கோடியும் வருமானம் கிடைக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. எஃப்.எம், தொலைக்காட்சி மட்டுமின்றி சினிமா, ஆன்மிகம் உள்ளிட்ட பாடல்களையும் ஆப்-இல் கேட்டு மகிழலாம். ரயில்வே துறை அறிமுகப்படுத்தவுள்ள இந்த சேவை ஸ்மார்ட்போன் உபயோகிக்கும் பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பயணிகள் வசதிக்காக ஆப் (app) அறிமுகம் செய்கிறது ரயில்வே: டி.வி., ரேடியோ நிகழ்ச்சிகளை பார்த்து, கேட்டு மகிழலாம்
Reviewed by மறத்தமிழன்
on
March 20, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 20, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.