March 10, 2017
மல்லையாவை 9000 கோடியுடன் ஓடவிட்டு மக்களை சுரண்டும் வங்கிகள்… சேவாக் கொந்தளிப்பு!
இந்தியாவில் ஸ்டேட் வங்கியில் ஆன்லைன் பணப்பரிமாற்றத்திற்கு கட்டணம் வசூலிப்பதற்கு கிரிக்கெட் வீரர் சேவாக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், கிங் பிஷர் நிறுவனத்தின் தலைவர் மல்லையா குறித்து ட்வீட் செய்துள்ளார்.
இந்திய வங்கிகளில் 9000 கோடி கடன் வாங்கி அதை திருப்பி செலுத்தாமல், இங்கிலாந்தில் தலைமறைவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், சேவாக், மல்லையா அவர்களே, தயவுசெய்து திரும்பி வாருங்கள்! பணப்பரிமாற்ற கட்டணம் என்ற பெயரில், உங்களது கடனை எங்களிடம் இருந்து வங்கிகள் வசூலிக்க தொடங்கியுள்ளன என்று தனது டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
தற்போது வங்கிகள் தங்களது சேவைகளில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலிக்க துவங்கியிருப்பதை சேவாக் சுட்டிக்காட்டியுள்ளார்.
மல்லையாவை 9000 கோடியுடன் ஓடவிட்டு மக்களை சுரண்டும் வங்கிகள்… சேவாக் கொந்தளிப்பு!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 10, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 10, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.