March 14, 2017
ஒரே ஒரு பல்புக்கு 8 லட்சம் மின் கட்டணம்.. விவசாயி அதிர்ச்சி
தனது வீட்டில் ஒரு பல்பு பயன்படுத்தியதற்காக 8 லட்சம் ரூபாய் மின் கட்டணம் வந்ததை கண்டு விவாசாயி ஒருவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஆந்திராவில் தனது வீட்டில் ஒரு பல்பு பயன்படுத்தியதற்காக 8 லட்சம் ரூபாய் மின் கட்டணம் வந்ததை கண்டு விவாசாயி ஒருவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஆந்திரா மாநிலம் கொட்டப்பல்லியில் உள்ள நரசுருகோட்டி கிராமத்தில் ரவீந்தரா என்பவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவர் இதே பகுதியில் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார்.
இதற்கிடையே கடந்த டிசம்பர் மாதம் மின் இணைப்பு பெற்று, ஒரே ஒரு பல்பு மட்டும் தனது வீட்டில் அவர் போட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து டிசம்பர் மாதத்திற்கான மின் கட்டணம் 85 ரூபாயும், ஜனவரி மாதம் 87 ரூபாயும் மின் கட்டணமாக அவர் செலுத்தியுள்ளார்.
இந்நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான மின் கட்டணம் கடந்த 16ம் தேதி வந்தது. அப்போது அதனை பார்த்த விவசாயி அதிர்ச்சியடைந்தார். அதாவது ஒரே ஒரு பல்புக்கு, மின் கட்டணமாக ரூ.8 லட்சத்து 73 ஆயிரத்து 690 ரூபாய் செலுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது முழுக்க முழுக்க மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமாக தான் பார்க்கப்படுகிறது. மின் கட்டணம் தொடர்பாக கொட்டப்பல்லி மின்வாரிய அதிகாரிகளிடம் ரவீந்தரா கேட்டதற்கு, அவர்கள் நாங்கள் எதுவும் செய்ய முடியாது, உயர் அதிகாரிகளிடம் சென்று முறையிடுங்கள் என்று தெரிவித்தார்களாம். இதனால் அந்த விவசாயி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
ஒரே ஒரு பல்புக்கு 8 லட்சம் மின் கட்டணம்.. விவசாயி அதிர்ச்சி
Reviewed by மறத்தமிழன்
on
March 14, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 14, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.