Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 22, 2017

லண்டனில் 7 மில்லியன் பவுண்டுகள் கடத்தல், பணத்துடன் இருவர் தலைமறைவு


லண்டனில் உள்ள ஹீத் ரூ விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ள சுலோ என்னும் இடத்தி வைத்து. பணம் பரிமாறும் வாகனம் ஒன்று கடத்தப்பட்டுள்ளது. கடத்தப்பட்டது என்பது போக, அதில் வேலை செய்த 2 நபர்கள் 7 மில்லியன் பணத்தோடு எஸ்கேப் ஆகிவிட்டார்கள்.
கிரெடிட் சூசேஸ் என்னும் நிறுவனத்திற்கு, குறித்த வாகனத்தில் 7 மில்லியன் பவுண்டுகள் வருவது, சஞ்செஜ்(40) மற்றும் சிதிக்(33) ஆகிய இருவருக்கு மட்டுமே தெரியும்.
இவர்கள் கொடுத்த தகவலை அடுத்தே குறித்த வாகனத்தில் ஓட்டுனராக வேலை பார்த்த நபரும். பாதுகாப்புக்கு இருந்த 2 நபர்களும் தாம் ஓட்டிய வாகனத்தை கடத்திச் சென்று. அதில் உள்ள பணத்தை வேறு ஒரு வாகனத்திற்கு மாற்றி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்கள். வாகனம் அனாதையாக நடு தெருவில் நின்றுள்ளது.
சில நிமிடத்தில் எல்லாம் பொலிசார் அங்கே வந்துவிட்டார்கள். இருப்பினும் பணத்தை கொள்ளை அடித்த நபர்களை பிடிக்க முடியவில்லை.
மிகவும் நுப்பமாக பிளான் போட்டு பெரும் பணத்தை கொள்ளையடித்துள்ளார்கள். உள்ளே உள்ள கறுப்பு பெட்டிகளில் சிலவேளைகளில் பெரும் பணம் இருக்கும். சில வேளைகளில் பணம் இருக்காது.
ஆனால் அன்றைய தினம் 7 மில்லியன் பவுண்டுகள் இருப்பதை அவர்கள் எவ்வாறு அறிந்திருந்தார்கள் என்று சந்தேகப்பட்ட பொலிசார் இருவரை கைதுசெய்துள்ளார்கள். ஆனால் பணத்தை திருடிய நபர்கள் இன்னும் சிக்கவில்லை. தகவலை கொடுத்த நபர்களே சிக்கியுள்ளார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.