Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 4, 2017

ஐபோன் செயலியை ஓன்றை வடிவமைத்துள்ளார் ஜப்பான் நாட்டை சார்ந்த 79 வயது பாட்டி!!


வயது முதிர்ந்தவர்களுக்கான பயன்பாட்டிற்கு ஐபோன் செயலியை ஓன்றை வடிவமைத்துள்ளார் ஜப்பான் நாட்டை சார்ந்த 79 வயது பாட்டி மசாக்கோ வகாமியா.
ஹினாடன் என்ற பெயரிடப்பட்டுள்ள அந்த ஐபோன் ஆப் ஜப்பான் நாட்டின் பாரம்பரிய பொம்மை திருவிழாவான ஹினமட்சுரி என்ற திருவிழாவை அடிப்படையாக கொண்டது.
இதில் குறிப்பிட்ட ஆடையணிந்த பொம்மைகளை ஹினமட்சுரி திருவிழாவில் வைக்கப்படும் வரிசையில் நிரப்பினால் வெற்றியடைவீர்கள்.
தன் கண்டுப்பிடிப்பு குறித்து பேசிய மசாக்கோ வகாமியா ‘இளையோருக்கு எதிராக விளையாடும் போது, என்னை போன்ற வயதானவர்கள் எளிதாக தோற்க நேரிடும்.
எங்களது விரல்கள் வேகமாக செயல்படாது. அதனால், முதியவர்கள் விளையாடும் மாதிரியான ஒரு ஐபோன் செயலியை உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்படிப்பட்ட செயலிகள் மிக குறைவு’ என்று கூறினார்.
ஓய்வு பெற்ற வங்கியாளரான வகாமியா தனது 60வது வயதில் கணினி பயிற்சியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.