Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 19, 2017

டெல்லியில் தமிழக விவசாயிகள் 6 வது நாள் போராட்டம்: கண்டுகொள்ளாத மத்திய அரசு!


டெல்லியில் தமிழக விவசாயிகள் கடந்த 6 நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரை நிர்வாணமாக பிரதமர் மோடி வீடு அருகே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அமைச்சர்களோ அல்லது தமிழக அதிமுக எம்.பிக்களோ கண்டுகொள்ளவே இல்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக விவசாயிகளின் ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு கூறியதாவது: ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம்.

அதிமுகவை சேர்ந்த எம்.பிக்கள் யாரும் இதுவரை எங்களை சந்திக்கவில்லை, அதேப்போல மத்திய அரசு சார்பில் யாருமே எங்களை சந்திக்க முன்வரவில்லை.

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எங்களிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு போராட்டத்தை கைவிடுமாறும், கோரிக்கைகள் குறித்து திங்கள்கிழமை பேச வருமாறும் கேட்டுக்கொண்டார்.

இது பற்றி சக விவசாயிகளிடம் பேசினேன். அமைச்சரின் அறிவுரைப்படி வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன் சிங்கை சந்தித்து எங்கள் கோரிக்கைகளை முன்வைப்போம்.

அரசு கோரிக்கைகளை நிறைவேற்றினால் போராட்டத்தை கைவிடுவது பற்றி முடிவு செய்வோம். அப்படி முடிவு எட்டப்படவில்லை என்றால் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.