Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 12, 2017

6-வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம்...!


தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் நடத்தி வரும் போராட்டம் ஆறாவது நாளாக இன்றும் தொடர்கிறது. பெரும் திரளான மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
நேற்று, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் வந்து மீனவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். அதற்கு பின்னர், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீனவர்களை போராட்டக் களத்தில் சந்தித்தார். பின்னர் அவர், 'மீனவர்கள் பிரச்னையில் பா.ஜ.க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இலங்கை அரசு நம்முடைய ஒப்பந்தத்தை மீறிவிட்டது.
இதுகுறித்து மத்திய அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். எனவே உடலை அடக்கம் செய்ய முன்வாருங்கள்' என்று கோரிக்கை வைத்தார். அவர் முன்வைத்த இந்தக் கோரிக்கையை மறுத்து தொடர்ந்து 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மீனவர்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.