March 11, 2017
உத்தரபிரதேசத்தில் முதல்-மந்திரி பதவிக்கு 5 பேர் இடையே கடும் போட்டி
உத்தரபிரதேசத்தில் முதல்- மந்திரி பதவிக்கு உமாபாரதி உள்பட 5 பேர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. அதில் பா.ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றது. தேர்தலின் போது முதல்-மந்திரி வேட்பாளர் யார் என பா.ஜனதா அறிவிக்கவில்லை.தேர்தல் முடிவு வெளி யான பிறகு முதல்-மந்திரி தேர்வு செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டது. தற்போது முடிவு வெளியான நிலையில் முதல்-மந்திரி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
எனவே, முதல்-மந்திரி பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. போட்டி களத்தில் 5 பேர் உள்ளனர். அவர்களில் கேசவ் மயூரா, யோகி அதியானந்த், மத்திய தொலை தொடர்பு மந்திரி மகேஷ் சர்மா, கல்ராஜ் மிஸ்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களுடன் மத்திய மந்திரி உமாபாரதியும் களத்தில் உள்ளார். உத்தரபிரதேசத்தில் யாதவர் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் உயர் சாதி வகுப்பினரை முன்வைத்து பா.ஜனதா பிரசாரம் மேற்கொண்டது.
இந்த நடைமுறை தற்போது உத்தரபிரதேசத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சியை பிடிக்க வழி வகுத்துள்ளது. எனவே, இந்த 2 வகுப்பை சேர்ந்தவர்களில் ஒருவர் முதல்-மந்திரி ஆகலாம் என கருதப்படுகிறது.
அப்படி பார்த்தால் மாநில தலைவர் கேசவ் மயூரா அல்லது மத்திய மந்திரி சந்தோஷ் காங்வார் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால் கேசவ் மயூரா விசுவ இந்து பரிஷத்தை சேர்ந்தவர். மேலும் மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் ஆவார்.அதே நேரத்தில் உயர் சாதி பிரிவினர் என்ற வகையில் மத்திய மந்திரி மகேஷ் சர்மாவுக்கு வாயப்பு உள்ளது.
முதல்-மந்திரி வேட்பாளர் தேர்தல் களத்தில் மத்திய மந்திரி உமாபாரதியும் உள்ளார். இவர் மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்-மந்திரி ஆவார்.தற்போதைய முதல்- மந்திரி ஷிவ்ராஜ் சிங் சவுகானுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இவர் உத்தரபிரதேச அரசியலில் களம் இறக்கப்பட்டார். சன்னியாசியான இவர் பேரும் முதல்-மந்திரி வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இருந்தாலும், அவரது மனது இன்னும் மத்திய பிரதேசத்தையே சுற்றி வருகிறது. கல்ராஜ் மிஸ்ரா பெயரும் முதல்-மந்திரி வேட்பாளர் பட்டியலில் உள்ளது. பிராமண சமூகத்தை சேர்ந்த இவர் அரசியல் அனுபவம் வாய்ந்தவராக கருதப்படுகிறார்.
இறுதியாக முதல்-மந்திரி வேட்பாளர் பட்டியலில் கோரக்பூர் எம்.பி. யோகி அதியானந்த் பெயரும் இடம் பெற்றுள்ளது. முதல் - மந்திரி வேட்பாளருக்கான பெயரை தேர்வு செய்வதில் கோரக்நாத் கோவில் தலை மையகத்தின் பங்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தின் பங்கும் அதில் உள்ளது. எனவே உத்தர பிரதேச முதல்-மந்திரி பதவிக்கு பா.ஜனதாவில் கடும் போட்டி நிலவுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா ஆகியோர் முதல்-மந்திரியை முடிவு செய்வார்கள்.
உத்தரபிரதேசத்தில் முதல்-மந்திரி பதவிக்கு 5 பேர் இடையே கடும் போட்டி
Reviewed by மறத்தமிழன்
on
March 11, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 11, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.