Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 11, 2017

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து 5 பேர் பரிதாபசாவு! பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு


சிவகாசி வெற்றிலையூரணியில் பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

வெடி தயாரிப்பில் பெயர் போன விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அடிக்கடி பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து நடப்பது தொடர் கதையாக உள்ளது.

இந்நிலையில் இன்று சிவகாசி அருகேயுள்ள  வெற்றிலையூரணி பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து நடந்தது. அந்த விபத்தில், ஆலையில் பணியில் ஈடுபட்டிருந்த காயல்பட்டி விஜயா, வெற்றிலை ஊரணியை சார்ந்த முருகேஸ்வரி, பால்ராஜ், ஒட்டம்பட்டி சண்முகவேல் உட்பட 5 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து தீயை அணைத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.