March 20, 2017
பாதாள சாக்கடையை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி.. கடலூரில் சோகம்
கடலுர் அருகே பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 3 துப்பரவு பணியாளர்கள் விஷ வாயு தாக்கி பலியாயினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் முதுநகர் சாலையில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். பாதாள சாக்கடைக்குள் இறங்கி அவர்கள் சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியது.
இந்த சம்பவத்தில் துப்புரவு தொழிலாளர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள கொடிக்கால் குப்பம் பகுதியை சேர்ந்த அப்புக்குட்டி என்ற ஜெயக்குமார், வேலு , சோரியம்குப்பம் முருகன் ஆகியோர் எனத் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்ட போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உயிரிழந்த ஊழியர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு கடலூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த கடலூர் மாவட்ட சார் ஆட்சியர் ஆணையிட்டுள்ளார். துப்புரவு தொழிலாளர்கள் 3 பேர் விஷவாயுத் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் துப்புரவு தொழிலாளர்கள் இதுபோன்ற பணிகளில் ஈடுபடும் போது உயிரிழப்பு ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.
பாதாள சாக்கடையை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி.. கடலூரில் சோகம்
Reviewed by மறத்தமிழன்
on
March 20, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 20, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.