Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 23, 2017

தமிழகத்தை பழிவாங்கும் பாஜக: வரலாறு காணாத வறட்சி.. கேட்டது 39,565 கோடி.. ஒதுக்கியது வெறும் 1,748 கோடிதான்..


வரலாறு காணாத வறட்சி தமிழகம் கண்டுள்ள நிலையில் வெறும் 1,748 கோடி ரூபாய் மட்டுமே மத்தியில் ஆளும் பாஜக அரசு ஓரவஞ்சனையாக ஒதுக்கியுள்ளது.

 தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக 1,748 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை விவசாய மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தை இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முற்றிலும் கைவிட்டது. காவிரியிலும் முறையாக தண்ணீர் வழங்கவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்தது.

இந்த வறட்சியின் காரணமாக சுமார் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை மற்றும் மாரடைப்பால் மரணம் அடைந்தார்கள். இதனிடையே விவசாயிகள் உயிரிழப்பை தடுக்க வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரியும் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினரும் பல்வேறு அமைப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் 39,565 கோடி ரூபாய் வறட்சி நிவாரணமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் வறட்சி பாதித்த பகுதிகளை நேரில் வந்து ஆய்வு செய்த மத்தியக் குழு, வறட்சி நிவாரணமாக தமிழகத்திற்கு 2,096.80 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இதனையடுத்து, தேசிய செயற்குழுவின் துணை கமிட்டி 1,748.28 கோடி ரூபாய் மட்டுமே தர பரிந்துரை செய்துள்ளது.
இதனையடுத்து, இன்று வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் இன்று 1,748 கோடி ரூபாய் தமிழகத்தின் வறட்சி நிவாரணமாக ஒதுக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார். தமிழக அரசு கேட்ட 39,565 ரூபாய் கேட்ட நிலையில், அரை சதவீதம் கூட பணம் ஒதுக்கவில்லை என்று விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.