Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 9, 2017

சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் உடலை வாங்க மறுப்பு: தங்கச்சி மடத்தில் 3-வது நாளாக போராட்டம் நீடிப்பு


இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இலங்கை கடற்படையினர் அட்டகாசம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பிரிட்ஜோவை சுட்டுக்கொல்லும் முன் படகை நோக்கி 7 முறை சுடப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட துப்பாக்கி துப்பாக்கி குண்டு தனியார் குற்றயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர  தீர்வு ஏற்பட வேண்டும், சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மூன்று நாட்களாக இறந்த மீனவர் பிரிட்ஜோ உடலை வாங்காமல் தங்கச்சி மடத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.