March 6, 2017
3 கோடி, 150 கார்களுக்கு அதிபதி ‘‘மல்லையாவிற்கு சவால் சவரத் தொழிலாளி’’
முடி திருத்தம் தொழில் செய்து இன்று கோடீஸ்வரராக வலம் வருகிறார் இளம் தொழிலதிபர் ரமேஷ்பாபு. தன்னை வளர்த்துவிட்ட தொழிலை மறக்காமல் இன்றும் செய்து வருகிறார்.
பெங்களூருவில் உள்ள அசோக் நகரை சேர்ந்தவர் ரமேஷ் பாபு (45). கடந்த 1994-ம் ஆண்டு முதல் இவர் பெங்களூருவில் உள்ள போரிங் மையத்தில் ஆடம்பர சலூன் வைத்து, முடி திருத்தும் பணி செய்து வருகிறார்.
பெங்களூருவில் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு பிறகு, இவர் ரூ.3.2 கோடி மதிப்பில் மெர்சடிஸ் மேபேக் எஸ்600 என்ற வெளிநாட்டு சொகுசு காரை அண்மையில் வாங்கியுள்ளார் எனத் தெரியவந்தது.
இதுகுறித்து ரமேஷ் பாபு கூறும்போது, “எனது சிறுவயதிலேயே அப்பா இறந்துவிட்டார். அதன் பிறகு என்னுடைய அம்மா மிகவும் கஷ்டப்பட்டு என்னை 10-ம் வகுப்பு வரை படிக்க வைத்தார்.
குடும்ப வறுமை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பல்வேறு வேலைகளை செய்து கொண்டிருந்தபோது, ஒரு சலூனில் முடி திருத்தும் வேலை கிடைத்தது.
அங்கு சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, 1994-ல் சொந்தமாக சலூன் வைத்தேன். நான் கொஞ்சம் கொஞ்சமாக சேமித்த பணத்தைக் கொண்டு முதலில் மாருதி ஆம்னி வேன் வாங்கினேன்.
நான் பயன்படுத்திய நேரம் போக, மற்ற நேரங்களில் அதை வாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்தேன். வாடகை கார் தொழிலில் நல்ல வருமானம் கிடைத்ததால் மேலும் சில பழைய கார்களை வாங்கி வாடகைக்கு விட்டேன். ஒரு கட்டத்தில் என்னிடம் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேர்ந்ததால் சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் தொடங்கினேன்.
இப்போது என்னிடம் 3 ஆடி கார்கள், 10 பி.எம்.டபுள்யூ, 11 மெர்சடிஸ் பென்ஸ், 1 ரோல்ஸ் ராய்ஸ், 3 ஜாகுவார் உட்பட 150 கார்கள் உள்ளன. இந்த ஆடம்பர கார்களை வாடகைக்கு விட்டு, மாதந்தோறும் பல லட்சங்கள் சம்பாதிக்கிறேன்.
வெளிநாட்டு தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என பிரபலங்கள் பெங்களூரு வந்தால் என்னிடம்தான் வாடகைக்கு கார் எடுத்துச் செல்வார்கள்” என்கிறார்.
பல கோடி ரூபாய் சொத்துக்கள் இருந்தும் முடி திருத்தும் வேலையை தொடர்ந்து செய்கிறார் ரமேஷ்பாபு.
3 கோடி, 150 கார்களுக்கு அதிபதி ‘‘மல்லையாவிற்கு சவால் சவரத் தொழிலாளி’’
Reviewed by மறத்தமிழன்
on
March 06, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 06, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.