Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 22, 2017

ரூ.2 லட்சம் மேல் ரொக்கப் பரிமாற்றம் செய்தால் அபராதம் : மத்திய அரசின் திருத்தத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பு


ரொக்கப் பணபரிமாற்றத்திற்கான உச்சவரம்பு ரூ.3 லட்டசத்திலிருந்து, ரூ.2 லட்சமாக மத்திய அரசு குறைத்துள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சட்டவிரோதமாக பணத்தை பதுக்கி வைத்திருப்பதை தடுக்க கடுமையான சட்டவிதிகள் அமல்படுத்தப்பட உள்ளதாக உயர்மட்ட வரித்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். பணம் எவ்வளவு வைத்திருக்கலாம் என்பதற்கான வரம்பு குறித்த எந்த ஒரு பரிந்துரையும் இல்லை. ஆனால் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கப் பணபரிமாற்றத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் ரூ.2 லட்சம் ரூபாய்க்கு மேலான ரொக்கப் பணிபரிமாற்றத்திற்கு அதே அளவிலான அபராதம் வசூலிக்கப்படும் என வரித்துறை அதிகாரி கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.

வஞ்சிக்கும் நடவடிக்கை இது என பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த போது ரூ.3 லட்சம் வரை ரொக்கப் பரிமாற்றத்திற்கு தடையேதும் இல்லை என அறிவித்தார். ரூ.3 லட்சம் ரூபாய்க்கும் மேல் ரொக்கமற்ற பரிமாற்றமாக செய்ய வேண்டும் என்றும், இந்த நடைமுறை ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது நிதி மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக, மத்திய வருவாய்துறை செயலாளர் தனது ட்வி்ட்டர் பக்கத்தில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.