March 9, 2017
மத்திய அரசுக்கு ஆதரவாக 25% இருந்த விமான எரிபொருள் வாட் வரி குறைப்பு : விமான பயண கட்டணம் குறையும்
மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்து, ஏவியேசன் டர்பைன் ப்யூயல் (ஏடிஎப்) எனப்படும் விமான எரிபொருளுக்கான வரியை 25%ல் இருந்து 1% ஆக குறைக்கப்பட்டு இருப்பதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்தார். வரிக்குறைப்பால், பயணக் கட்டணம் பெருமளவு குறையும் என்றும், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தொலைதூர சிறு நகரங்களை தலைநகருடன் இணைக்கும் நல்ல நடவடிக்கை எனவும் அறிவிப்பு பாராட்டை பெற்றுள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்து துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியதாவது: மத்திய அரசின் 'மண்டல தொடர்பு திட்டத்திற்கு' (ஆர்சிஎஸ்) ஆதரவுக்கரம் அளிக்கும் வகையில், டெல்லியில் இருந்து தொலைதூர சிறு நகரங்களுக்கு நேரடி சேவை வழங்கும் விமானங்களுக்கான எரிபொருளுக்கு 1% மட்டும் நிபந்தனைகளுக்கு உட்பட்ட வரியாக விதிக்கப்படுகிறது.
வரி குறைப்பால், விமான கட்டணம் வெகுவாக குறையும், அதையடுத்து, வடகிழக்கு மாநிலத்தவரும், தொலைதூர சிறு நகரங்களைச் சேர்ந்தவர்களும் தலைநகரை எளிதில் தொடர்பு கொள்ள முடியும். இவ்வாறு சிசோடியா தகவலளித்தார். ஆர்சிஎஸ் திட்டத்தை மத்திய அரசு கடந்தாண்டு அறிமுகம் செய்தது. எனினும், இதுவரை அந்த திட்டத்தில் விமான சேவை தொடங்கப்படவில்லை. ஏடிஎப் வரி குறைப்பு நடவடிக்கை குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆர்சிஎஸ் திட்டத்தில், டெல்லியின் இந்திராகாந்தி விமான நிலையம் கணக்கில் எடுக்கப்படவில்லை. அப்படி இருந்தும், விமான போக்குவரத்துத் துறை வேண்டுகோளை ஏற்று, டெல்லி அரசு அறிவித்துள்ள ஏடிஎப் வரி குறைப்பு வரவேற்கக் கூடியது. விமான போக்குவரத்து நிறுவனங்களும், டெல்லி அரசின் அறிவிப்பை பெரிதும் வரவேற்றுள்ளன.
* வாட் வரி குறைப்பால் டெல்லியில் இருந்து தொலை தூரத்துக்கு செல்லும் விமான பயணத்துக்கான கட்டணம் பெருமளவு குறையும்.
* இந்த வரி குறைப்புமூலம் டெல்லி இருந்து வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தொலை தூர இடங்களுக்கு செல்லும் பயணிகள் பெரிதும் பயனடைவார்கள்.
* மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டதால், இந்த வரி சலுகையை டெல்லி ஆம் ஆத்மி அரசு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
* பட்ஜெட்டில் வாட் வரி குறைப்பு செய்ததற்கு முதல்வர் கெஜ்ரிவால் பாராட்டு தெரிவித்துள்ளார்.
* அதேபோல், டெல்லி அரசின் இந்த வரி சலுகைக்கு விமான நிறுவனங்களும் வரவேற்பு தெரிவித்துள்ளன.
மத்திய அரசுக்கு ஆதரவாக 25% இருந்த விமான எரிபொருள் வாட் வரி குறைப்பு : விமான பயண கட்டணம் குறையும்
Reviewed by மறத்தமிழன்
on
March 09, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 09, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.