Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 2, 2017

23 லட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு மோசடி செய்த வானொலி அறிவிப்பாளருக்கு சிறைத் தண்டனை


திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி வழங்கி விட்டு யுவதி ஒருவரிடம் 23 லட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு மோசடி செய்த வானொலி ஒன்றின் அறிவிப்பாளர் ஒருவருக்கு ஒரு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை மேலதிக நீதவான் லங்கா ஜயரத்ன நேற்று (28) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தண்டனை விதிக்கப்பட்ட அறிவிப்பாளர் தமிழ் யுவதி ஒருவரை காதலித்து அவரை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி வழங்கி 23 லட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு மோசடி செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது.
மோசடி செய்த 23 லட்சம் ரூபா பணத்தில் அறிவிப்பாளர் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவை யுவதியிடம் திரும்ப கொடுத்துள்ளதுடன் மேலும் 4 லட்சம் ரூபாவை நேற்று நீதிமன்றத்தில் வைத்து யுவதியிடம் வழங்கியுள்ளார்.
சம்பந்தப்பட்ட யுவதி வெளிநாட்டில் கல்வி கற்று வந்துள்ளதுடன் கல்வி பயிலும் போது சம்பாதித்த பணத்தையே குற்றம் சுமத்தப்பட்ட அறிவிப்பாளர் பெற்றுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, தமிழ் அறிப்பாளர் ஒருவருக்கே இந்த சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.