Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 7, 2017

டுடெர்டேவுக்காக சுமார் 200 பேரை கொன்றதாக காவல்துறை அதிகாரி ஒப்புதல் !


அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே நகர மேயராக இருந்தபோது, அவரோடு தொடர்புடைய ஒரு கொலைப்படையின் பகுதியாக சுமார் 200 பேரை தான் கொலை செய்துள்ளதாக பிலிப்பைன்ஸின் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

டுடெர்டே டவாவ்வில் பணிப்பொறுப்பில் இருந்தபோது, அவருக்காக கொலை செய்ததை அர்டுரோ லஸ்கானாஸ் முதலில் மறுத்துவிட்டார். ஆனால், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிலிப்பைன்ஸ் சென்ட் அவையின் விசாரணையின்போது, லஸ்கான்ஸ் தன்னுடைய சாட்சியத்தை மாற்றி கூறியுள்ளார்.

தன்னுடைய நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு உயிராபத்து வரும் என்று அஞ்சியே முதலில் பொய் கூறியதாக அவர் தெரிவித்திருக்கிறார். இந்த குற்றச்சாட்டுக்கள் புனையப்பட்டவை என்று டுடெர்டெயின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். கடந்த ஆண்டு இன்னொரு சாட்சியும் இதே போன்ற சாட்சியத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.