March 7, 2017
19 பெண் சிசுக்கள் கலைப்பு செய்த கொடூர டாக்டர் பாலாசாகேப் கித்ரபுரே கைது
மராட்டிய மாநிலம் சாங்கிலி அருகே 19 பெண் சிசுக்கள் கலைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மராட்டிய மாநிலம் சாங்கிலி மாவட்டம் மனேரஜூரி கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன். இவரது மனைவி சுவாதி (வயது 32). இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில், மூன்றாவதாக சுவாதி கர்ப்பம் ஆனார். அவரது வயிற்றில் பெண் சிசு வளர்வதை அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் பாலாசாகேப் கித்ரபுரே கண்டறிந்து, பிரவீனிடம் தெரியப்படுத்தினார்.
ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதால், 3–வது பெண் குழந்தை வேண்டாம் என்று கருதிய பிரவீன், தன்னுடைய மனைவியின் வயிற்றில் வளரும் பெண் சிசுவை கலைத்து விடுமாறு டாக்டரிடம் கூறினார். இதற்கு சுவாதியும், அவரது பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், பிரவீன் அதற்கு செவிசாய்க்கவில்லை. இதைத்தொடர்ந்து, சுவாதியின் வயிற்றில் வளர்ந்த சிசுவை டாக்டர் பாலாசாகேப் கித்ரபுரே கலைத்தார். அப்போது, ஏற்பட்ட வலி மற்றும் ரத்தப்போக்கு காரணமாக சுவாதி பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை இதுபற்றி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீனை கைது செய்தனர். டாக்டர் பாலாசாகேப் கித்ரபுரே தலைமறைவாகிவிட்டார். கலைக்கப்பட்ட பெண் சிசுவை மீரஜ் தாலுகா மைஷால் கிராமத்தில் உள்ள நீரோடையில் போட்டது வெளிச்சத்துக்கு வந்தது. இதைத்தொடர்ந்து, போலீசார் அங்கு சென்று பொக்லைன் எந்திரம் மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. நீரோடையில் தோண்ட தோண்ட 19 பெண் சிசுக்கள் பிணமாக மீட்கப்பட்டன.
அவை அனைத்தும் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டு அங்கு வீசப்பட்டிருந்தன. இந்த மாபெரும் கருக்கலைப்பு மோசடியின் பின்னணியில் டாக்டர் பாலாசாகேப் கித்ரபுரே ஈடுபட்டது வெட்ட வெளிச்சமானது. அது மட்டுமின்றி இன்னும் ஏராளமான பெண் சிசுக்களை கலைத்து அவற்றை தன்னுடைய ஆஸ்பத்திரியின் கழிவறையில் அழித்ததும் தெரியவந்தது. இதற்காக பயன்படுத்தப்பட்ட மருந்து மாத்திரைகள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றினர். சாங்கிலி அருகே நடைபெற்ற இந்த மாபெரும் கருக்கலைப்பு சம்பவம் மராட்டியத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
டாக்டர் பாலாசாகேப் கித்ரபுரேவை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டது. டாக்டரை தேடிய போலீசார் கர்நாடக மாநிலம் பெல்காமில் அவரை கைது செய்தனர். இதற்கிடையே மீட்கப்பட்ட 19 சடலங்களும் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பட்டு உள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
19 பெண் சிசுக்கள் கலைப்பு செய்த கொடூர டாக்டர் பாலாசாகேப் கித்ரபுரே கைது
Reviewed by மறத்தமிழன்
on
March 07, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 07, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.