Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 5, 2017

திருச்சியில் பரபரப்பு மே 17 இயக்கத் தோழர் திருமுருகன் காந்தி கைது


திருச்சியிலிருந்து நெடுவாசல் நோக்கி வாகன பேரணி செல்ல முயன்ற திருமுருகன் உட்பட மே 17 இயக்கத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து திருச்சியிலிருந்து நெடுவாசல் நோக்கி வாகனப் பேரணி நடத்துவத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி இன்று (05-03-2017) காலை 10 மணி அளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள பெரியார் சிலைக்கு முன்பு கூடி, ஹைட்ரோகார்பன் திட்டத்தை மக்கள் மீது திணிக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பிய படி தலைவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்பு பேரணியாக புறப்படும் முன்பு காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும் அதனால் கலைந்து செல்லுமாறு கூறினர். பின்பு தலைவர்கள் கூடி பேரணியாக செல்லாமல் தனித்தனியாக அவரவர் வாகனங்களில் அவரவர் வீடுகளுக்கு சென்று நெடுவாசலில் சந்திக்குமாறு முடிவு செய்யப்பட்டது. ஆனாலும் காவல்துறையினர் அனுமதிக்காமல் கைது செய்வதாக அறிவித்தனர். நெடுவாசல் செல்ல எந்த தடையும் இல்லாத நிலையில் ஏன் கைது செய்ய வேண்டும் என்று தலைவர்கள் காவல்துறையினரை நோக்கி கேள்வி எழுப்பிய போது, பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பதற்கு இங்கு கூடியது குற்றம் என்றும் அதனால் கைது செய்வதாக கூறினார். பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பதை குற்றம் என்று கூறியும், மத்திய பாஜக காவி அரசிற்கு துணை போகும் தமிழக காவல்துறையை கண்டித்தும் குழுமியிருந்த தோழர்கள் அனைவரும் பெரியார் சிலைக்கு முன்பாக சாலையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து காவல்துறை அராஜகத்துடன் செயல்பட்டு அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்து அருகிலுள்ள மண்டபத்தில் அடைத்தனர். இதில் 100க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை தமிழ்ப் புலிகள், காஞ்சி மக்கள் மன்றம், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழர் விடியல் கட்சி மற்றும் மே பதினேழு இயக்கம் கலந்துகொண்டது.








No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.