Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 4, 2017

நெடுவாசலில் 17-வது நாளாக போராட்டம்: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் தொடரும் மக்கள் உறுதி


 ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் மக்கள் 17 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கோட்டைக்காட்டில் மட்டும் மக்கள் நேற்று தற்காலிகமாக தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். ஆனால் நெடுவாசல் பகுதியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மாவட்ட ஆட்சியரை இன்று சந்தித்து பேசவுள்ளதாக நெடுவாசலில் போராட்டம் நடத்தி வரும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் தொடரும் என்று மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். நெடுவாசல் செல்லும் வழியில் ஆங்காங்கே போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். போராட்டம் செல்பவர்கள் ஆயுதம் எதுவும் கொண்டு செல்கின்றனரா அல்லது தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர்கள் வருகின்றனரா என்று போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.