Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 9, 2017

ஒவ்வொரு ஆண்டும் விபத்துக்களில் 1.5 லட்சம் பேர் பலியாகிறார்கள் - பகீர் ரிப்போர்ட்


நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் 5 லட்சம் விபத்துக்களில் 1.5 லட்சம் பேர் பலியாகிறார்கள் என்று மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று மக்களவையில் தெரிவித்தார்.
மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது-

ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் 5 லட்சம் விபத்துக்களில் 1.5 லட்சம் பேர் பலியாகிறார்கள். சாலைகள் அமைப்பும் இந்த அளவு விபத்துக்கள் உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். விபத்துக்களை குறைத்து, உயிரிழப்புகளைத் தடுக்க அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

கிராமங்கள், சிறுநகரங்களைக் கடந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இதுபோன்ற விபத்துக்களைத் தடுக்க,அதிகமான சுரங்கப்பாதைகள், ேமம் பாலங்கள் கட்டப்படும்.
இதுவரை ரூ. ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 180 கோடி மதிப்பில், 14 ஆயிரத்து 268 கி.மீ சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளது.

2016-17ம் ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்றவும், மேம்படுத்தவும் ரூ.62 ஆயிரத்து 46 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் தேசியநெடுஞ்சாலைகளில் டோல்கேட் கட்டணமாக ரூ.43 ஆயிரத்து 721 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.