Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 14, 2017

15 வயது சிறுமியை சாக்லெட் வாங்கி கொடுத்து, சீரழித்த போலீஸ் ஏட்டு..!


மகளிர் யார் யாருக்குத்தான் பயந்து வாழ்வது என்று தெரியாமல் தவிக்கின்றனா். பயிருக்கு வேலியாய் பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஒரு போலீஸ் ஏட்டே 15வயது சிறுமியை சாக்லெட் வாங்கிக் கொடுத்து, ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது என்ன கொடுமைங்க சார்?
ஹைதராபாத்  நகரில் உள்ளது காமபுத்திபுரா காவல் நிலையம். இங்கு போலீஸ் ஏட்டாக இருப்பவா் மஹபூப். இவா் வீட்டின் அருகே தாய், தந்தை இல்லாத 15 வயது  பள்ளி செல்லும் சிறுமி இருக்கிறார். அவா் தனது பாட்டியின் பராமரிப்பில் வளா்ந்து வருகிறார்.
அங்கிள், அங்கிள் என்று அந்த சிறுமி போலீஸ் ஏட்டு மஹபூப்பிடம் அன்பாக பழகுவார். மஹபூப்பிற்கு திருமணம் நடந்து விட்டது. அவருக்கு 4 குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் அந்த சிறுமியை ஏட்டு மஹபூப் தனியாக அழைத்து செல்வதை யாரும் தவறாகப் பார்க்கவில்லை. இதனையடுத்து அந்த சிறுமிக்கு போலீஸ் ஏட்டு வேண்டியதை வாங்கிதந்து தனது ஆசைக்கு இரையாக்கினார். இது வழக்கமாக நடந்து வந்தது.
ஒரு நாள் அந்த சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் பலாத்காரம் செய்து கொண்டிருந்தார். அந்த சமயம் அந்த சிறுமியின் அக்கா வீட்டிற்குள் வந்து விட்டார்.
இதனையடுத்த போலீஸ் ஏட்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து போய்விட்டார். தனது தங்கைக்கு நடந்த கொடுமையைப் பார்த்த சகோதரி காமபுத்திபுரா காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்தனா்.
பின்னா் அந்த சிறுமியை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பினா். மருத்துவ பரிசோதனையில் பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டால் போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.