Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 6, 2017

பணக்காரர்களுக்கு கட்டணம் இல்லை! ஏழைகளுக்கு 150 ரூபாய் கட்டணம்! இது நியாயமா SBI?


1 லட்சம் வைத்திருந்தால் எந்த கட்டணமும் இல்லை. 2500 ரூபாய் வைத்திருந்தால் 150 அபராதம் இது தான் எஸ்.பி.ஐ.யின் சமீபத்திய அறிவிப்பின் சாராம்சம்.

SBI வங்கியின் சமீபத்திய அறிவிப்புகள் குறித்த முக்கிய அம்சங்கள்

    SBI வங்கிக் கணக்குகளில் குறைந்த பட்ச இருப்புத் தொகை வைத்திருக்காவிட்டால், சேவை கட்டணமாக 100 ரூபாய்க்கும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
    பெட்ரோபாலிட்டன் நகரங்களில் குறைந்த பட்ச தொகையான (Monthly Average Balance (MAB)) 5 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக 75 சதவீதத்திற்கு கீழ் சென்றால், அதாவது, 3750 ரூபாய் மட்டுமே இருப்பு வைத்திருந்தால்,  சேவை வரியாக 100 ரூபாய்க்கு அதிகமான கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.
     2500 ரூபாய்க்கு கீழ் சென்றால் கூடுதலாக ஒரு 50 ரூபாய் வசூலிக்கப்படும். குறைந்தபட்ச தொகை மற்றும் கூடுதல் கட்டணங்கள் இடத்திற்கு தகுந்தவாறு மாறுபடும். குறிப்பாக கிராமங்களில் சற்று குறைவாக இருக்கும்
     அதிக வாடிக்கையாளர்களை பெற வேண்டும் என்பதற்காக கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் குறைந்த பட்ச தொகை வைத்திருக்காதவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டன. தற்போது இந்த கட்டணங்கள் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இதற்கான அனுமதியை ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கியுள்ளது.
     SBI  ATM களில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால், 10 ரூபாய் வசூலிக்கப்பட உள்ளது. பிற வங்கிகளின் ஏ.டி.எம்.களில் எஸ்.பி.ஐ. கார்டுகளை வைத்து 3 முறை பணம் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் எடுத்தால் 20 ரூபாய் வரை பணம் வசூலிக்கப்படும்.
     SBI வங்கிக் கணக்கில் 25 ஆயிரத்திற்கும் அதிகமாக பணம் இருந்தால், SBI ATM களில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. 1 லட்சம் பணம் வைத்திருந்தால், எந்த வங்கியின் ஏ.டி.எம். மையங்களிலும் கட்டணம் இன்றி பணம் எடுத்துக் கொள்ளலாம்.
     டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் 3 மாதத்திற்கு சராசரியாக 25 ஆயிரம் ரூபாயை கணக்கில் வைத்திருந்தால், அவர்களுக்கு 3 மாதங்களுக்கு எஸ்.எம்.எஸ். கட்டணமாக 15 வசூலிக்கப்படுகிறது. UPI/ USSD பண பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டணமும் இல்லை.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.