Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 17, 2017

தந்தை முன்னே மகள்களை கற்பழித்த 13 பேர் கொண்ட கும்பல்: பழிக்குப் பழி வாங்கிய கொடூர சம்பவம்


குஜராத்தில் இரண்டு மகள்களை கடத்திய கும்பல், தந்தை கண்முன்னரே அவர்களை பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் தாகோத் மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு 13 வயது மற்றும் 15 வயதுள்ள இரண்டு மகள்கள் உள்ளனர். மேலும் இவருக்கு ஒரு மகன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அவரது மகன் மது வழக்கு தொடர்பாக பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் பொலிசாரிடம் தனக்கு மது வழங்கியர் குமாத் பாரியா என்று கூறியுள்ளார். இதனால் பொலிசார் குமாத் பாரியா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த குமாத் பாரியா இதற்கு பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்று நினைத்துள்ளார். இதனால் கடை நடத்தி வந்தவரின் இரண்டு மகள்களையும் குமாத் பாரியா 13 பேர் கொண்ட கும்பலுடன் ஒரு சொகுசு காரில் கடத்தியுள்ளார்.
அதைத் தொடர்ந்து அவர்களின் தந்தையும் கடத்தியுள்ளனர். அப்போது நான்கு பேர் இரண்டு மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பாக செல்ல சொகுசு காரில் இருந்த கும்பல், தந்தை முன் அந்த இரண்டு இளம் பெண்களையும் பாலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும் அவர் என்னை பொலிசில் காட்டிக் கொடுத்தற்கு உன் மகனை பழிவாங்குவதற்காகத்தான் உன் மகளை பலாத்காரம் செய்தோம் என்று குமாத் பாரியா கூறியுள்ளார்.
பின்னர் அவர்களை காரை விட்டு இறக்கிவிட்டு சென்றுள்ளனர். பொலிசாரிடம் இதுகுறித்து புகார் அளிக்கக்கூடாது எனவும் மிரட்டியுள்ளனர். இது குறித்து அந்த இளம்பெண்களின் தந்தை புகார் அளிக்க 13 பேரில் குமாத் பாரியா உள்பட ஐந்துபேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் 8 பேரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.