Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 11, 2017

மத துவேஷ கருத்துக்களை போதித்ததாக புகார்: 125 பள்ளிகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ்


மத சகிப்பின்மையை மத துவேஷ  கருத்துக்களை  ஊக்குவிப்பதாக கூறி மேற்குவங்காளத்தில் உள்ள 125 பள்ளிகளுக்கு அம்மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  இவற்றில் 96 பள்ளிகள் அரசு சான்றிதழ்கள் பெறவில்லை எனவும் மேற்கு வங்காள மாநில கல்வி மந்திரி பார்தா சட்டர்ஜி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும் போது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இணையதளத்தில் மேற்குவங்காளத்தில் 300 பள்ளிகளில் அதன் செயல்பாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 125 பள்ளிகள் அடையாளம் காணப்பட்டு முதற்கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மத கோட்பாடுகளின் அடிப்படையில் இந்த பள்ளிகளில் கற்பிக்கப்பட்டால் அவை நிறுத்தப்படும்” என்றார்.

பாரதீய ஜனதா கட்சியின் சித்தாந்த அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தொடர்புடைய தனியார் தொண்டு நிறுவனத்தால் மேற்கூறப்பட்ட பள்ளிகள் நடத்தபடுவதாக மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ்  கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.