Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 7, 2017

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது: ரூ.10 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு


ரூ.10 கோடி மோசடி செய்த குற்றத்திற்காக சென்னையில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியை சேர்ந்த பிரபல சினிமா தயாரிப்பாளருக்கு ரூ.1000 கோடி கடனாக பெற்றுத்தருவதாக கூறி அதற்கு கமிஷன் தொகையாக ரூ.10 கோடியை முன்னதாகவே வாங்கியுள்ளார். ஆனால் பவர் ஸ்டார் சீனிவாசன் கடன் தொகையும் வாங்கி தரவில்லை, கமிஷனாக பெற்ற ரூ.10 கோடியையும் திருப்பித்தரவில்லை. எனவே அந்த இயக்குனர் டெல்லி பொருளாதார குற்றபிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை வந்து அண்ணா நகரிலிருந்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை கைது செய்துள்ளனர். ஏற்கனவே கடந்த 2013-ம் ஆண்டில் தொழிலதிபர்கள், அரசியல் மற்றும் சினிமா துறையில் உள்ளவர்களுக்கு கடன் வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையத்தில் கிட்டத்தட்ட 30 புகார்கள் உள்ளன. அதில் 2 வழக்குகளில் பவர் ஸ்டார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 மாதம் அவர் சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.