Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 10, 2017

புதிய 10 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!


விரைவில் புதிய 10 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய இருப்பதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து, புதிய ரூ.2000 நோட்டுகளை பெரும் அதிரடியாக, ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. அத்துடன் புதிய ரூ.500 நோட்டுகளையும் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது.
இந்த நிலையில், புதிய 10 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில்  விடப்பட உள்ளதாக, ரிசர்வ் வங்கியின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
புதிய ரூ.10 நோட்டுகள் 2017 ஆண்டு வரிசை முறையில் அச்சடிக்கப்பட்டு, விரைவில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில், இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாகவும், ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.