March 11, 2017
திராவிட கழக மகளிரணி சார்பில் ஆரிய மனுதர்ம சாஸ்திர நகல் எரித்து போராட்டம் திருவாரூரில் 108 பெண்கள் உள்பட 158 பேர் கைது
திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு மணியம்மையின் பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் கழக மகளிரணி மற்றும் மகளிர் பாசறை சார்பில் மனுசாஸ்திர நகல் எரிப்பு போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்திற்கு திராவிட கழக பொதுக்குழு உறுப்பினர் கமலம் தலைமை தாங்கினார். மகளிரணி மாவட்ட தலைவர் சரசு, மாவட்ட செயலாளர் மரகதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மகளிர் பாசறை மாநில செயலாளர் செந்தமிழ்செல்வி கலந்து கொண்டு பேசினார். பெண்களை கேவலமாக இழிவுபடுத்தும் வகையில் மனுதர்ம சாஸ்திரத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த பக்கங்களின் நகலை தீயிட்டு எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண்களை இழிப்படுத்தும் செயல்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதில் நாகை மாவட்ட தலைவர் பேபி, மாவட்ட செயலாளர் சுமதி, மாநில விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் மோகன், மண்டல தலைவர் கோபால், மாவட்ட தலைவர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 108 பெண்கள் உள்பட 158 பேரை போலீசார் கைது செய்தனர்.
திராவிட கழக மகளிரணி சார்பில் ஆரிய மனுதர்ம சாஸ்திர நகல் எரித்து போராட்டம் திருவாரூரில் 108 பெண்கள் உள்பட 158 பேர் கைது
Reviewed by மறத்தமிழன்
on
March 11, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 11, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.