Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 12, 2017

காவிரி மேலாண்மை வாரியம் கோரி டெல்லியில் தமிழக விவசாயிகள் 100 நாட்கள் உண்ணாவிரதம்!


காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் நாளை மறுநாள் முதல் 100 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், கர்நாடகத்தில் மேக்கேதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும், தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும். தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம் ரூ.40 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
டெல்லி ஜந்தர்மந்தரில் நாளை மறுநாள் முதல் மொத்தம் 100 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.
போராட்டம் குறித்து தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது:
விவசாயிகளை தற்கொலையில் இருந்து பாதுகாக்கவும், அவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் டெல்லியில் வருகிற 14-ந்தேதி தொடங்கி 100 நாட்கள் தொடர் உண்ணா விரத போராட்டம் நடத்தப்பட உள்ளது. கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடி வீட்டின் முன்பு மண் சட்டியில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அய்யாக்கண்ணு கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.