Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 1, 2017

வருங்கால கணவனிடம் பெண்கள் கூற வெட்கப்படும் 10 விஷயங்கள்!


வருங்கால கணவனிடம் பெண்கள் கூற வெட்கப்படும் 10 விஷயங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.

பெண் பார்த்தாயிற்று என தெரிந்து விட்டாலே கல்யாண குஷி பிரகாசமாக தெரிகிறது, முகம் ஜொலிக்கிறது என கூறி கிண்டல் செய்ய ஒரு பெரும் கும்பலே நம்மை சுற்றி திரியும். ஆண்களையே முகம் சிவக்க வைப்பார்கள் என்றால் பெண்கள் பற்றி கூறவா வேண்டும்.

தானாகவே பல கனவுகள் காரணத்தால் பெண்கள் அதிக வெட்கத்துடன் காணப்படுவார்கள். இதில், தனது வருங்கால கணவனிடம் பெண்கள் கூற வெட்கப்படும் விஷயங்கள் என்னென்ன என்று இங்கு காணலாம்...

விஷயம் #1 தங்களிடம் இருக்கும் கை சூப்புவது, நகம் கடிப்பது போன்ற சின்ன சின்ன கெட்ட பழக்கங்கள் பற்றி கூற கூச்சப்படுவார்கள்.

விஷயம் #2 தங்கள் கணவரை ஹேன்ட்சம், ஸ்மார்ட்டாக இருப்பதை கூற கூட சில பெண்கள் வெட்கப் படுவார்கள்.

விஷயம் #3 தங்களுக்கு பிடித்த விஷயங்கள் குறித்தும், காதலுக்கான வார்த்தைகள் பிரயோகிக்கவும் பெண்கள் அதிகம் வெட்கப்படுவார்களாம். குறிப்பாக ஐ லவ் யூ, டார்லிங் போன்ற வார்த்தைகள் பயன்படுத்த.

விஷயம் #4 இருவரின் சம்பாத்தியம் கொண்டு எப்படி பணம் சேமிப்பது, எப்படி எல்லாம் திட்டங்கள் போடுவது என்பது குறித்து பேச சங்கோஜமாக இருக்குமாம்.

விஷயம் #5 கணவனின் வாழ்வில், தனக்கான இடம் அதிகமாக வேண்டும், அவர் தினமும் தன்னுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்பதை கூற வெட்கப்படுவார்களாம். முக்கியமாக கணவர் போகுமிடமெல்லாம் உடன் வர வேண்டும் என கேட்க தயக்கம் கொள்வார்களாம்.

விஷயம் #6 உடலுறவில் ஈடுபடுவது குறித்து தங்களுக்கு பிடித்த விஷயங்கள் பற்றி பேசவும் வெட்கப்படுவார்களாம்.

விஷயம் #7 விதவிதமான நெயில் பாலிஷ், ஹேர் கண்டிஷனர், ஷாம்பூ பயன்படுத்துவது குறித்து கூற தயக்கம் கொள்வார்களாம்.

விஷயம் #8 தங்களது உடல் வாகு எப்படி இருக்கிறது என்பது குறித்து கேட்டறிந்துக் கொள்ள வெட்கப்படுவார்களாம்.

விஷயம் #9 சோகமான, உருக்கமான காட்சிகளை கண்டு தாங்கள் அழும் போது அதை பார்த்து கிண்டலடிக்க கூடாது என்பதை கூற தயங்குவார்களாம்.

விஷயம் #10 தன் மீது அதிக காதலை வெளிப்படுத்த வேண்டும், எப்போதும் என்னை கொஞ்ச வேண்டும், அன்பை மழை போல் கொட்ட வேண்டும் என கேட்க தயங்குவார்களாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.