Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 13, 2017

ஓ.பன்னீர் செல்வம் VS சசிகலா.. இதுதாங்க லேட்டஸ்ட் ஆதரவு நிலவரம்!


முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சசிகலாவுக்கு ஆதரவாக உள்ளோர் குறித்த லேட்டஸ்ட் நிலவரம்.

முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், சசிகலாவும் மாறி மாறி ஆதரவு நிலையை வலுப்படுத்திக் கொள்ள கடுமையாக முயன்று வருகின்றனர். இருவரும் சரமாரியான குதிரைபேரத்தில் ஈடுபடுவதற்கு தேவையான "வசதிகளை" ஆளுநரின் "தாமதமும்" செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறது.

சசிகலா தரப்பில் எம்.எல்.ஏக்கள் அதிகம் உள்ளனர். அதேசமயம், ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் எம்.பிக்கள் அதிகமாகிக் கொண்டுள்ளனர். இருவரிடமும் உள்ள பலத்தின் லேட்டஸ்ட் நிலவரம் இது:

எம்.எல்.ஏக்கள் பலம்
சசிகலா - 128
ஓ.பன்னீர் செல்வம் - முதல்வர் உள்பட மொத்தம் 7 பேர்.

எம்.எல்.ஏக்கள் விவரம்
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் (போடிநாயக்கனூர்)
மாஃபா பாண்டியராஜன் (ஆவடி)
ஆறுக்குட்டி (கவுண்டம்பாளையம்)
சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்)
மாணிக்கம் (சோழவந்தான்)
மனோரஞ்சிதம் (ஊத்தங்கரை)
மனோகரன் (வாசுதேவநல்லூர்)

எம்.பிக்கள் பலம்
ஓ.பன்னீர் செல்வம் - 11 (9 லோக்சபா எம்.பிக்கள் + 2 ராஜ்யசபா எம்.பிக்கள்) மற்றும் சசிகலா புஷ்பா.

ஓ.பன்னீர் செல்வம் -  ஆதரவு எம்.பிக்கள் விவரம்:
லோக்சபா எம்.பிக்கள்
தூத்துக்குடி - ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி
நாமக்கல் - பி.ஆர். சுந்தரம்
வேலூர் - பி.செங்குட்டுவன்
பெரம்பலூர் - மருதராஜா
கிருஷ்ணகிரி - அசோக்குமார்
திருப்பூர் - சத்யபாமா
திருவண்ணாமலை - வனரோஜா
விழுப்புரம் - எஸ்.ராஜேந்திரன்
தேனி - பார்த்திபன்

ராஜ்யசபா எம்.பிக்கள்
டாக்டர் மைத்ரேயன்
ஆர்.லட்சுமணன்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.