Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 28, 2017

ராணுவ வீரர் தேஜ் பஹதூரின் அடுத்த பகீர்!


எல்லைப் பாதுகாப்புப்படை வீரர் தேஜ் பஹதூர், ராணுவத்தில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் மீண்டும் ஒருவீடியோ வெளியிட்டுள்ளார். அதில், 'வீடியோ வெளியிட்டதற்காக நான் துன்புறுத்தப்பட்டேன். மோடி, ஊழலை ஒழிக்க வேண்டும் என்கிறார். அதை வெளிக்கொண்டு வருவதற்காக முயற்சி செய்தால், இதுதான் பலனா?' எனக் கூறியுள்ளார்.
மேலும், அவருக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு உள்ளதாகக் கூறுவதற்கும் வீடியோவில் விளக்கமளித்துள்ளார். "எனது செல்ஃபோன், தொலைந்துபோனது. அது மீண்டும் கிடைத்தபோது, அதில் பாகிஸ்தான் எண்கள் இருந்தன. ஆனால், எனக்கும் பாகிஸ்தானில் உள்ள யாருக்கும் தொடர்பு இல்லை.

அப்படிக் கூறுவதில் உண்மை இல்லை" என்று வீடியோவில் கூறியுள்ளார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.