February 22, 2017
கூவத்தூர் கும்மாளம் : பெண் உறுப்பினர்கள் என்ன பண்ணாங்க தெரியுமா? கருணாஸ்
கூவத்தூரில் கும்மாளம் அடித்த சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே நாம இன்னும் பேசிக் கொண்டிருக்கிறோம்.
அதை விட்டால் கருணாஸை வைத்து காமெடி பண்ணிக் கொண்டிருக்கிறோம். அங்கு கணிசமான பெண் உறுப்பினர்களும் தங்கி இருந்தார்கள் தெரியுமா?
சரி, அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? விஷயம் லீக் ஆகியுள்ளது. அந்த பாரம்பரியப் பத்திரிக்கை சில விஷயங்களை கூறுகிறது.
அவர்கள் முதல் இரண்டு நாட்கள் குளிப்பதும், தூங்குவதுமாக இருந்தார்கள். மூன்றாம் நாள் நம்மை விடமாட்டார்கள் என்பது தெரிந்து போனது.
கூடிக்கூடி பேசினார்கள். தப்பிக்கவும் வழி இல்லை..! என்ன செய்யலாம்..?மெல்ல சமையல் நடக்கும் இடங்களுக்கு போனார்கள்.
எப்படி சமைக்கணும் என்று ஐடியா கொடுக்க, கடுப்பான மெஸ் பார்ட்டி நான் முப்பது வருசமா சமைக்கிறேன். போய் உங்க வேலையைப் பாருங்க என்று விரட்டி விட, ஆண் உறுப்பினர்கள் பகுதியில் குடி, கும்மாளம் ஆட்டம் பாட்டம் என தூள் பறந்துள்ளது.
அந்தப் பகுதிக்கு போக மன்னார்குடி கூலிப்படை அனுமதிக்கவும் இல்லை. இரவும் குத்தாட்டம், குடி என ஆண்கள் என்ஜாய் பண்ணியுள்ளனர்.
கடுப்பான தாய்க்குலங்கள் கருணாஸை அழைத்து லெப்ட் அன்ட் ரைட் வாங்கியுள்ளனர்.
எங்களைப் பாத்தா உனக்கு மனுஷங்களா தெரியலியா..? எங்களையும் கவனி என்று கும்மாங்குத்து விட, அதுக்கென்ன கவனிச்சுடுவோம். தினகரன் காதில் போட்டுள்ளார் கருணாஸ்.
மறுநாள் முதல் அவர்களும் செம ஜாலியாக பொழுதைக் கழித்தார்கள்(?)… அதன் பின் கோலம் போடுவது, தலைப் பின்னி விடுவது, நீச்சல் குளத்தில் குளிப்பது, என படு குஷியாக இருந்தார்கள்.
அந்த நேரத்தில் நாட்டில் சிறுமிகள் சிதைக்கப்பட்டார்கள்,மாணவர்கள் கடலில் கலந்த எண்ணெயை பக்கெட்டால் அள்ளிக் கொண்டிருந்தார்கள்.
என்ன சொல்வது..?
கூவத்தூர் கும்மாளம் : பெண் உறுப்பினர்கள் என்ன பண்ணாங்க தெரியுமா? கருணாஸ்
Reviewed by மறத்தமிழன்
on
February 22, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 22, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.