Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 4, 2017

“தமிழன் மேல் உண்மையா பற்று இருந்தா, வாங்க ரஜினி, ஆவேசமா அறிவிச்சவர் ஆச்சே நீங்க”




எப்போதும் ரஜினி தமிழன் மேல் பற்று உடையவராக காட்டிக்கொள்ளுவார். எல்லாம் நீங்கள் கொடுத்து தான் என்று சொல்லும் ரஜினிக்கு இப்போ தன்னை நிரூபிக்க ஒரு வாய்ப்பு வந்திருக்கு.
காவேரி பிரச்சனையில் , ரஜினி உண்ணாவிரதம் இருந்தார். நதி நீர் இணைப்புக்கு 1 கோடி ரூபாய் அறிவிச்சார். ஆனால், அது ஆச்சு பல வருஷம். ஒண்ணும் நடக்க மாட்டேங்கிது
.
தன் பொண்ணுங்களுக்கு கவுரவ பதவிகளை மோடி அரசிடமிருந்து பெறும் ரஜினி, நதிநீர் இணைப்பு பத்தி பேசவே காணோம் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.
இப்போது, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி , பிப்ரவரி 2 வது வாரம் நதிநீர் இணைப்பிற்காக மோட்டார் சைக்கிள் பேரணி நநடத்துவதோடு, அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்க முடிவு செய்தது.
இதில் தொடக்கத்தில் நதிநீர் இணைப்பு பற்றி பேசிய ரஜினியை கூப்பிட முடிவாகியுள்ளதாம்.
ரஜினி கட்சி மேடைகளில் ஏறமாட்டார். அவர் எப்படி நம்மோடு வருவார்?’ என்று சிலர் கேட்க, ‘கூப்பிடுவோம். அவர் நம்மோடுசேர்ந்து குரல் கொடுத்தாலும் சரி, தனியே இதற்காக பேசினாலும் சரி. அவர் குரல் ஒலிக்கணும்’  என்று சொல்லப்பட்டு உள்ளது.
இப்போ என்ன செய்வார் ரஜினி? இப்போ என்ன செய்வார்?


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.