Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 20, 2017

சசி குரூப்பின் ஆதிக்கம்! ஜெயா டிவி செய்தியாளர் அலறல்! ஆரம்பிச்சிட்டாங்கடோய்!


தற்போது சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றிருக்கிறார். ஆனால் நிழல் முதல்வராக தினகரன் செயல்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பதவியேற்ற ஒரு மணி நேரத்திலேயே பன்னீர்செல்வம் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இன்று ஜெயா டிவி நிர்வாகத்தில் தலையிட்ட சசி குரூப் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தியதாக கூறப்படுகிறது.
சசி குரூப்பின் ஆதிக்கத்தால் ஜெயா டிவி செய்தியாளர் கண்ணன் என்பவர் தனது பணியிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.
மேலும் அவர் கூறுகையில், ‘திறமையான ஒரு கல்வி அமைச்சரை இழந்து விட்டார்கள் தமிழகத்தில் உள்ள மாணவர்கள். தனது தனிப்பட்ட திறமையால் ஜெயலலிதாவின் அபிமானத்தைப் பெற்றவர் மாஃபா பாண்டியராஜன். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தனது பதவியைப் பறிகொடுத்திருக்கிறார். அதனால், அவருக்கு நன்றி சொல்வோம் நண்பர்களே.’
ஜெயா டிவியின் விருதுநகர் மாவட்ட செய்தியாளரான கண்ணன் என்பவர். “சசிகலா வகையறாக்களின் ஆதிக்கத்தின் கீழ் என்னால் நிச்சயம் வேலை பார்க்க முடியாது. அதனால், ஜெயா டிவி செய்தியாளர் பொறுப்பிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டேன்.” என்று கூறியிருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன.
அரசியல்வாதிகளையும் தாண்டி, செய்தியாளர்களையும் மிரட்சிக்கு ஆளாக்கியிருக்கிறார்கள் சசிகலாவின் சொந்தபந்தங்கள் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.