Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 6, 2017

ஜெயலலிதா உடல் பதப்படுத்தப்பட்டது உண்மைதான்.. டாக்டர் சுதா சேஷய்யன் விளக்கம்


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்த போது அவரது உடல் பதப்படுத்தப்பட்டது உண்மைதான் என்று டாக்டர் சுதா ஷேசய்யன் விளக்கம் அளித்தார்.

ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப்பட்டது உண்மைதான் என்று அப்பல்லோ மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை மற்றும் அவரது மரணம் குறித்து ஏகப்பட்ட வதந்திகள் பரவி வருவதால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று செய்தியாளர் சந்திப்பை அப்பல்லோ மருத்துவமனை ஏற்பாடு செய்திருந்தது. இந்த செய்தியாளர் சந்திப்பில் ஜெயலலிதாவிற்கு சிறப்பு மருத்துவம் அளித்த ரிச்சர்ட் பியல் உள்ளிட்ட மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.

அப்போது, ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப்பட்டது தொடர்பான கேள்விக்கு டாக்டர் சுதா ஷேசய்யன் விளக்கம் அளித்தார். மறைந்த ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப்பட்டது உண்மைதான் என்று உறுதியாக தெரிவித்த சுதா, ஜெயலலிதாவின் உடல் 5-ந் தேதி 12.20 மணிக்கு பதப்படுத்தப்பட்டது என்று கூறினார்.

இது எதற்காகவென்றால் தலைவர்கள் இறக்கும் போது பல்வேறு தரப்பினரும் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்துவார்கள். அப்போது யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இது செய்யப்படுகிறது. இதே போன்று எம்ஜிஆர் மரணம் அடைந்த போதும் செய்யப்பட்டது என்று டாக்டர் சுதா விளக்கம் அளித்தார்.

மேலும், ஜெயலலிதாவின் கன்னத்தில் இருந்த புள்ளிகள் குறித்த கேள்விக்கு அப்படி தான் பார்க்கவில்லை என்று டாக்டர் சுதா கூறினார். மேலும், உடலை பதப்படுத்தும் போது ஐந்தரை லிட்டர் திரவம் உள்ளே செலுத்தப்படும். அப்போது கூட அவருக்கு கன்னத்தில் எந்தவிதமான ஓட்டைகளையும் தான் பார்க்கவில்லை என்று டாக்டர் சுதா உறுதியாக கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.