Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 16, 2017

சசி ஜெயில் : பட்டாசு,மது, கறி விருந்து, புத்தாடை : திரையுலகம்


சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.  நடிகர்,  நடிகைகள் கொண்டாட்டம்.
மது விருந்து, கறி விருந்து புத்தாடை அணிந்து தீபாவளி போல கொண்டாடினார்கள். தமிழகத்தைப் பிடித்த சனியன் ஒழிந்தது என்கிறார்கள்.
சித்தார்த்: நீதிக்கான கியாரன்டி தரப்பட்டுள்ளது. வரவேற்கிறேன்.
பிரகாஷ்ராஜ்: இது முடிவல்ல… தூய்மைப்படுத்துவது ஆரம்பம்தான். இன்னும் பல மைல்கள் செல்ல வேண்டியுள்ளது.
பார்த்திபன்: சட்டம் என் கையில் என பணம் மார்தட்டிக்கொள்ளவிடாமல், சட்டம்  சத்தியத்தின் பக்கமே என போராடிய நீதியின் ஆச்சாரியார்களுக்கு வணக்கமும்  நன்றியும்.
அரவிந்த்சாமி: கீழ்கோர்ட் தீர்ப்பு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போதைய முதல்வர் தனது அலுவலகத்துக்கு இன்று  சென்று  பணியை செய்வதை காண வேண்டும். மக்களுக்காக எம்எல்ஏக்களும் பணிக்கு   திரும்பவேண்டும்.
இசையமைப்பாளர் கங்கை அமரன்: என்னைப் பொறுத்தவரையில் ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவன். ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில்  நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே’ என்று ஒரு பாடல் உண்டு. சிறுக சிறுக நான் உழைத்து சம்பாதித்து வாங்கிய சொத்தை பறித்தார். இப்போது சரியான நேரத்தில் இறைவன் தண்டனை வழங்கியிருக்கிறான்.
இனி சசிகலாவின் முதல்வர் கனவு ஒருபோதும் நிறைவேறாது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே சசிகலாவின் ஆட்டம் கடுமையாக இருந்தது, அவரே முதல்வராகி இருந்தால் தமிழகம் என்ன நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும்? கடவுள் காப்பாற்றிவிட்டான் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
குஷ்பு: தீர்ப்பு வந்துவிட்டது. யாஹு… கொண்டாட்ட நேரம். மாநிலம் பாதுகாக்கப்பட்டுள்ளது. பயமுறுத்திக்கொண்டிருந்த இருண்ட காலம் முடிவுக்கு வந்திருக்கிறது. காதலர் தினத்தையொட்டி தமிழ்நாட்டு மக்களுக்கு சுப்ரீம் கோர்ட் சிறந்த பரிசு வழங்கி இருக்கிறது. இனி மக்கள் பயமின்றி நிம்மதியாக சுவாசிக்க முடியும்.
கவுதமி: ஊழல்  செய்ததற்காக சசிகலா குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். நீதி ஜெயித்திருக்கிறது. அதேபோல்  ஜெயலலிதாவின் மரணத்துக்கும் அவர் பதில் சொல்லி ஆக வேண்டும். இரு வழக்கும்  ஒரே தண்டனைக்குரியது அல்ல.
ஶ்ரீ பிரியா: நாடகமே உலகம். நாமெல்லாம்  நடிகர்கள். இயக்குபவன் இறைவன். முக்கியமாக  தொகுப்பாளன். வேண்டாத காட்சிகளை  தக்க சமயத்தில் வெட்டி எறிவான். நன்றி இறைவா.
கமல்ஹாசன்:  பழைய பாட்டுத்தான் இருந்தாலும்… ‘தப்பான ஆளு எதிலும் வெல்லும் ஏடா  கூடம்.. எப்போதும் இல்லை… காலம் மாறும் நியாயம் வெல்லும்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.