February 28, 2017
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: பணிகள் முடங்கும் அபாயம்
புதுதில்லி: நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வாராக் கடன்களுக்கு உயர் அதிகாரிகள் பொறுப்பு ஏற்பது, வங்கித்துறையில் மத்திய அரசு சீர்திருத்தங்களை கைவிடவேண்டும், நிரந்தர வேலைவாய்ப்புகளை அவுட்சோர்சிங் சேவைக்கு விடக்கூடாது, காலி பணியிடங்களை நிரப்பக் கோரியும், பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது கூடுதல் நேரம் பணிபுரிந்ததற்கு ஊக்கத்தொகை வழங்கக் கோரியும், வங்கி ஊழியர்களுக்கான சம்பள விகிதத்தை புதுப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் வற்புறுத்தி வந்தனர்.
இந்நிலையில், ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்காததை அடுத்து, நாடு முழுவதும் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் ஈடுப்பட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தில் ஒருங்கிணைந்த வங்கிகள் கூட்டமைப்பில் உள்ள 7 சங்கங்கள் ஈடுபடவிருப்பதால் பணப்பரிவர்த்தனை, காசோலை மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு வங்கிப்பணிகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: பணிகள் முடங்கும் அபாயம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 28, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 28, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.