Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 20, 2017

மக்களிடம் வன்முறையை தூண்டுவதாக கமல் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்


தமிழக சட்டசபை உறுப்பினர்களுக்கு எதிராக மக்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் நடிகர் கமலஹாசன் நடந்து கொள்வதாக இந்திய தேசிய லீக் கட்சி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.

கடந்த 18ம் தேதி நடிகர் கமலஹாசன் சட்டசபை உறுப்பினர்கள் தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் "People of Tamizhnadu, Welcome your respective MLAs with the respect they desrve back home" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதாவது தமிழ்நாட்டு மக்களே தங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களை தகுந்த மரியாதையுடன் வரவேற்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.

இதனைத்தொடர்ந்து இந்திய தேசிய லீக் கட்சியின் வட சென்னை மாவட்ட தலைவர் பிர்தவ்ஸ் நடிகர் கமலஹாசன் மீது இன்று சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.



No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.