Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 25, 2017

தங்கக்கட்டி கடத்தல் ‘பிசினஸ்’; திருநாவுக்கரசர் சிக்குகிறாரா? காங்., மேலிடம் அதிர்ச்சி!!


புதுக்கோட்டை அருகில் நேற்று முன்தினம் கடத்திவரப்பட்ட ரூ.3.5 கோடி மதிப்புள்ள 12 கிலோ தங்கக்கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரின் தீவிர ஆதரவாளரான குட்லக் ராஜேந்திரன் கைது செய்யப்பட்டார்.

தமிழகத்தில் காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் பொறுப்பேற்ற பின், இளங்கோவன் ஆதரவாக உள்ள மாவட்ட தலைவர்களை மாற்ற ஏற்பாடு செய்துவந்த நிலையில், தங்கம் கடத்தல் சம்மந்தமாக ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் கைதாகியிருப்பது திருநாவுக்கரசருக்கு பெரும் பீதியையும், நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், குட்லக் ராஜேந்திரன் திருநாவுக்கரசரின் தீவிர ஆதரவாளராவார். எந்தக் கட்சியில் திருநாவுக்கரசர் இருக்கிறாரோ, அதே கட்சியில் அவரும் இருப்பார். அப்படி இருக்கும்பட்சத்தில், பல கோடி மதிப்பு தங்கம் கடத்தலில் சிக்கிக் கைதாகியிருப்பது கட்சியின் மேலிடத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த கடத்தலில் இவருக்கும் தொடர்பு உள்ளதா? இதுதொடர்பான விளக்கத்தையும் காங்கிரஸ் மேலிடம் கேட்டுள்ளாதாக கூறப்படுகிறது. மாநிலத் தலைவரான குறுகிய காலத்திலேயே திருநாவுக்கரசர் நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருப்பது காங்கிரசில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக காங்கிரஸ் வைப்பு நிதி எவ்வாறு செலவிடப்பட்டுள்ளது எனவும், கையிருப்பு ரொக்கம் உள்ளிட்ட கணக்குகள் தொடர்பாகவும் அவர் மீது மேலிடத்தில் மூத்த தலைவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கணக்கு விவரங்களை உடனே சமர்ப்பிக்குமாறு காங்கிரஸ் மேலிடம் கேட்டுக்கொண்டுள்ளது. திருநாவுக்கரசரின் செயல்பாடுகள் குறித்து ஸ்டாலினும் சில விவரங்களைச் சோனியாவிடம் கோடிட்டுக்காட்டியுள்ளார். இது அவருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

தொடர் புகார்களால் காங்கிரஸ் மாநிலத் தலைவரான குறுகிய காலத்திலேயே திருநாவுக்கரசர் நெருக்கடிக்கு ஆளாகியிருப்பது அக்கட்சி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.