February 18, 2017
தமிழகத்தில் தர்மயுத்தம் தொடரும்.. பன்னீர் செல்வம் சபதம்
தமிழகத்தில் நேற்று முன்தினம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய அதிமுக அரசு பதவி ஏற்றது. பழனிசாமி அரசு 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டு இருந்தார்.
அதன்படி இன்று சிறப்பு பேரவை கூட்டம் நடந்தது. அதில் எதிர்கட்சிகளின் அமளியால் 2 முறை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் திமுக உள்பட எதிர்கட்சிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றி விட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்று உள்ளார்.
இதனை அடுத்து பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறும்போது,
எதிர்கட்சிகளை வெளியேற்றி விட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது ஜனநாயகத்திற்கு எதிரானது. மீண்டும் தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி தொடரும். தர்மம் வெல்லும். எங்களின் தர்மயுத்தம் இன்று முதல் தொடரும் என்றார்.
தமிழகத்தில் தர்மயுத்தம் தொடரும்.. பன்னீர் செல்வம் சபதம்
Reviewed by மறத்தமிழன்
on
February 18, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 18, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.